தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் அசுரன்

தனக்கு நேர்ந்த அவமானம் பிறருக்கு நடக்கக்கூடாது என்பதில் அதிகாரத்திற்கு வந்த பிறகும் ஸ்டாலின் தெளிவாக இருப்பதன் மூலம், அவரது ஆட்சி அனைத்து தரப்பினருக்குமான ஆட்சியாக அமையும்.

ஃப்ட்சஃப்ட்ச்
ஃப்ட்ச்

By

Published : May 7, 2021, 10:07 PM IST

Updated : May 7, 2021, 10:55 PM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று முதலமைச்சராகப் பதவியேற்கும் விழா அது. அனைத்து தரப்பினருக்கும் அழைப்பிதழ் சென்றது. அதில் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ஒருவர்.

பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா தரப்பிலிருந்து ஸ்டாலினுக்கு அழைப்பு சென்றிருக்கிறதா என்று அனைவருமே ஆச்சரியப்பட்டு, ஜெயலலிதா ஆரோக்கியமான அரசியலை கையில் எடுத்திருக்கிறார் என்று கூறினர்.

ஆனால், பதவியேற்பு விழாவுக்கு வந்த மு.க. ஸ்டாலினுக்கு 12ஆவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மாறாக சமக தலைவர் சரத்குமார், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் அப்போது பெரும் விவாதத்தை கிளப்பியது.

இதனையடுத்து ஸ்டாலினுக்கு பின்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது தன்னுடைய கவனத்திற்கு வராமல் நடந்துவிட்டதாக ஜெயலலிதா விளக்கம் தெரிவித்தார்.

ஐந்து வருடங்கள் கழித்து இன்று மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், சீமான், கமல் ஹாசன் என அனைவருக்கும் அழைப்பிதழ் சென்றது. வந்ததோ ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், சமக தலைவர் சரத்குமார் போன்றோர். வந்தவர்களுக்கு அவர்களின் கௌரவம் குறையாமல் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

பதவியேற்பு விழா முடிந்த பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஓபிஎஸ், தனபால் ஆகியோர் ஒரே மேஜையில் சமமாக அமர்ந்து தேநீர் அருந்தினர். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியது.

அதுமட்டுமின்றி, தன்னை தொடர்ந்து விமர்சனம் செய்துவந்த கமல் ஹாசன், ஓபிஎஸ் போன்றோருக்கு முன்வரிசையில் இருக்கையை ஒதுக்கியது, சரிசமமாக ஒரே மேஜையில் அமர்ந்து சாப்பிட்டது என மு.க. ஸ்டாலின் ஆரோக்கிய அரசியலுக்கான விதையைப் போட்டிருக்கிறார்.

அசுரன் திரைப்படத்தில், ”படிச்சு அதிகாரத்திற்கு வந்து அவங்க நமக்கு செஞ்சத நீ யாருக்கும் செய்யாத” என்ற வசனம் வரும்.

தனக்கு நேர்ந்த அவமானம் பிறருக்கு நடக்கக்கூடாது என்பதில் அதிகாரத்திற்கு வந்த பிறகும் ஸ்டாலின் தெளிவாக இருப்பதன் மூலம், அவரது ஆட்சி அனைத்து தரப்பினருக்குமான ஆட்சியாக அமையும் என்று திமுகவினர், பத்திரிகையாளர்கள் என பலர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Last Updated : May 7, 2021, 10:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details