கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "மாநில அரசின், மக்கள் நல்வாழ்வுத் துறை கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
‘கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுக்கூட வேண்டும்’- முத்தரசன்! - முத்தரசன் அறிக்கை வெளியீடு
சென்னை: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய இந்த நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளை ஒன்று திரட்டுவது அரசின் கடமையாகும். மேலும், அனைத்து அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரட்டூரில் ஒருவருக்கு கரோனா அறிகுறி - அரசு மருத்துவமனையில் சிகிச்சை