தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறைவன் எல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளி வைப்பார்: இசையமைப்பாளர் டி.இமான்! - kollywood updates

imman sivakarthikeyan controversy: இறைவன் இருக்கிறார், மனிதனை தாண்டி இறைவனுக்கு எல்லாம் தெரியும் இறைவன் எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்று சிவகார்த்திகேயன் உடனான பிரச்சனை தொடர்பான கேள்விக்கு டி.இமான் பதில் அளித்துள்ளார்.

என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு இறைவன் முற்றுப் புள்ளி வைப்பார்
என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு இறைவன் முற்றுப் புள்ளி வைப்பார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 10:10 PM IST

Updated : Nov 2, 2023, 10:29 PM IST

சென்னை: அடையார் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சவரிமுத்து இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் சவரி முத்து, தயாரிப்பாளர் பிளேஸ் கண்ணன், இசையமைப்பாளர் டி.இமான், நடிகர்கள் வைபவ், சுனில் குமார் ரெட்டி, இயக்குநர்கள் அருண் ராஜா காமராஜ், ஆதிக் ரவிச்சந்தரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சவரிமுத்து, ”இது முழுவதும் காமெடி திரில்லர் படம், முழுவதும் சிரித்து மகிழும் வகையில் இருக்கும். படத்தில் அர்ஜுன் சிதம்பரம் நாயகனாக நடிக்க உள்ளார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சந்தான பாரதி உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்” என கூறினார். இதனை தொடர்ந்து பேசிய நடிகர் வைபவ், “என் நண்பர்கள் படம், இது முழுவதும் காமெடி படமாக உருவாகி வருகிறது” என்றார்.

பின்னர் பேசிய இசையமைப்பாளர் டி இமான், “துவாரகா புரொடக்ஷன் உடன் நல்ல கதை உள்ள படம், இசைக்கும் பாடலுக்கும் இந்த படத்தில் நல்ல இடம் உள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பரவும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, இறைவன் இருக்கிறார், மனிதனை தாண்டி இறைவனுக்கு எல்லாம் தெரியும். இறைவன் எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று பதிலளித்தார்.

இசையமைப்பாளர் இமான் தமது முதல் மனைவியை விவாகரத்து செய்து கொண்டார். அதனை தொடர்ந்து மீண்டும் வேறு ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு ஒன்றிற்கு பேட்டியளித்த இமான், ”சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டார் என்றும், அவரது துரோகம் வெளியில் சொல்ல முடியாதது” என்றும் தெரிவித்தார்.‌

மேலும் இந்த ஜென்மத்தில் அவருடன் நான் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்றும் தெரிவித்தார். இசையமைப்பாளர் டி இமான் இவ்வாறு கூறியது முதல் சமூக வலைதளங்களில் இமானையும், சிவகார்த்திகேயனையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:நடிகர் ஜூனியர் பாலையா மறைவு! சாட்டை உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்!

Last Updated : Nov 2, 2023, 10:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details