தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் நேர்ந்த கொலை...

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தினால், வீடு அருகில் நின்று பேசிக்கொண்டிருந்த இளைஞர்களை கத்தியை கொண்டு மிரட்டி தகராறில் ஈடுபட்ட பெயிண்டரை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

கொலை  கொலை வழக்கு  ரவுடி வெட்டிக் கொலை  சென்னையில் கொலை  வெட்டிக் கொலை  குற்றச் செய்திகள்  மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன்  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  crime news  murder  murder case  chenni murder issue  murder state in chennai because of suspicious
கொலை

By

Published : Sep 26, 2021, 7:24 AM IST

சென்னை: அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் காளி என்கிற காளிமுத்து (33). இவருக்கு நாகவள்ளி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். இவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

மனைவி மீது சந்தேகம்

இந்நிலையில் காளியின் மனைவி நாகவள்ளி அப்பகுதியில் வசிக்கும் ஆண் நண்பர்களிடம் சகஜமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காளி மனைவி மீது சந்தேகமடைந்து, தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

வழக்கம் போல் 24ஆம் தேதி 11 மணியளவில், காளி மது அருந்தி விட்டு, அம்பேத்கர் நகர் வழியாக வீட்டிற்கு நடந்து செறுள்ளார். அப்போது அதே பகுதியை சேரந்த தீபக்குமார் (26) தனது நண்பர்களுடன், காளியின் வீடு அருகே நின்று பேசி கொண்டிருந்தார்.

முன்னதாக மனைவி மீது சந்தேகததில் இருக்கும் காளி, வீடு அருகில் ஆண்கள் நின்று பேசி கொண்டிருப்பதைக் கண்டு, அவர்களுடன் தகராறில் ஈடுபட்டதுடன், அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறி விரட்டியுள்ளார். உடனே தீபக் தனது நண்பர்களுடன் சற்று தூரம் தள்ளி சென்று பேசி கொண்டிருந்தார்.

கத்தி குத்து

இவரது பேச்சுக்கு மரியாதை கொடுக்காததால் ஆத்திரமடைந்த காளி வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து தீபக்கை மிரட்டியதுடன், அவரை வெட்ட முயன்றுள்ளார். இதில் சுதாரித்து கொண்ட தீபக், காளி கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரது தலையில் வெட்டினார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.

வாய் தகராறு, கைகலப்பாக மாறி, தீபக் காளியை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த எம்.ஜி.ஆர் நகர் காவல் துறையினர் காளி உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீபக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபக் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகள் - சிறுமியை விடுவித்த எஸ்.பி

ABOUT THE AUTHOR

...view details