தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீமானை தொடர்ந்து தமிழிசையை கிண்டல் செய்த முரசொலி! - பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து 'அடுக்குமொழி அம்மாளு' எனும் தலைப்பில் கடுமையாக விமர்சித்து முரசொலி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

tamilisai

By

Published : May 16, 2019, 1:37 PM IST

திமுக பாஜக உடன் கூட்டணி அமைக்க மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியது கடும் சர்ச்சையை கிளப்பியது. இந்தக் கருத்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளிடையே கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழிசை கூறிய கருத்தை நிரூபித்தால், தான் அரசியல் விட்டு விலக தயார் என்றும் அப்படி நிரூபிக்காவிட்டால் பிரதமர் மோடியும், தமிழிசையும் விலக தயாரா என்று சவால் விடுத்தார்.

இந்நிலையில் திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில், "செய்தி ஊடகங்களுக்கு தினமும் தன் முகத்தை காட்டிகொள்ள ஜெயக்குமார் போன்ற அரசியல் பபூன்கள், அவருக்கு உறுதுணையாக தமிழிசை போன்ற கோமாளிகளும் அரசியலை கேலி கூத்தாக்கி வருகின்றனர்" என விமர்சித்துள்ளனர்.

முரசொலியில் வெளியான செய்தி

மேலும் "திமுக தலைவர் ஸ்டாலின் தெளிவாக பாஜகவுடன் எந்த பேச்சுவார்த்தை இல்லையென்று கூறியும் தமிழகத்தின் அடுக்குமொழி அம்மாளு தமிழிசை, திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது என தகவல் உள்ளது என்று மீண்டும் கூறியுள்ளார். இதிலே அவர் கூறுவது பொய் என்று தெரிகிறது. அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் அது தமிழ்நாடு பாஜக தலைவருக்கே தகவலாக உள்ளது என்பது வெட்கக்கேடு இல்லையா? இந்த வெட்கங்கெட்ட நிலையில், தலைவர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள், பாரம்பரியப் பெருமை பேசலாமா" என முரசொலி கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details