தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதி நவ. 22இல் பதவியேற்பு - புதிய பொறுப்பு நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரி, வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி பதவியேற்கிறார்.

munishwar nath bhandari  munishwar nath bhandari will take charge as acting chief justice  acting chief justice  chennai high court  acting chief justice of chennai high court  முனீஸ்வரர் நாத் பண்டாரி  பொறுப்பு நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி  சென்னை உயர் நீதிமன்றம்  சென்னை செய்திகள்  புதிய பொறுப்பு நீதிபதி  புதிய பொறுப்பு நீதிபதியாக பெறுபேற்கவுள்ளார் முனீஸ்வரர் நாத் பண்டாரி
முனீஸ்வரர் நாத் பண்டாரி

By

Published : Nov 20, 2021, 6:39 AM IST

Updated : Nov 20, 2021, 6:53 AM IST

சென்னை:சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதேபோல, அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, முனீஷ்வர் நாத் பண்டாரி பதவியேற்கும் வரை மூத்த நீதிபதி துரைசாமி, பொறுப்புத் தலைமை நீதிபதியாகச் செயல்படுவார் எனவும், நீதிபதி பண்டாரி பொறுப்பேற்ற பின், அவர் பொறுப்பு நீதிபதியாக நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட மூத்த நீதிபதி பண்டாரி, வரும் 22ஆம் தேதி பொறுப்புத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார். இவர் ராஜஸ்தான் அரசு வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தித் துறையின் வழக்கறிஞராகவும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

2007 ஜூலை 5 அன்று ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற இவர், 2019ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை பொறுப்பு நீதிபதியாக பதவிவகித்துள்ள முனீஷ்வர் நாத் பண்டாரி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார்.

இதையும் படிங்க: பணமோசடி வழக்கு - முன்னாள் அமைச்சர் சரோஜாவை கைது செய்ய தடை

Last Updated : Nov 20, 2021, 6:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details