தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

LGM Teaser: பெரும் வரவேற்பை பெறும் எல்ஜிஎம் டீசர் - LGM teaser

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் உருவாகி ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் ‘லெட்ஸ் கெட் மேரீட்’ படத்திற்கான டீசர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

லைக்குகளை குவிக்கும் எல்ஜிஎம் ட்ரெய்லர்!
லைக்குகளை குவிக்கும் எல்ஜிஎம் ட்ரெய்லர்!

By

Published : Jun 9, 2023, 2:24 PM IST

Updated : Jun 9, 2023, 3:42 PM IST

சென்னை:இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒவ்வொரு இந்தியர்கள் மனதிலும் தனியிடம் பிடித்தவர்.‌ தமிழ் ரசிகர்களை பொறுத்தவரையில் ‘தல’ எனக் கொண்டாடப்படுபவர். இவரது தலைமையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சிறந்த கிரிக்கெட்டராக உலகம் முழுவதும் அறியப்பட்ட தோனி, முதல் முறையாக தமிழ் படம் ஒன்றை தயாரித்து உள்ளார். இவர் தனது தோனி எண்டர்டெயின்மென்ட் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார். ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ‘எல்ஜிஎம்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது லெட்ஸ் கெட் மேரீட் (lets get married).

இப்படத்தை இசையமைப்பாளரான ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பு 'எல்ஜிஎம்' (லெட்ஸ் கெட் மேரீட்). இந்த திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பிரியன்ஷூ சோப்ராவும், தயாரிப்பாளராக விகாஸ் ஹசிஜாவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

இப்படத்தில் இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இதற்கு பேராதரவு கிடைத்து வருகிறது. மேலும், 'எல்ஜிஎம்' படத்தின் டீசரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனி, அவருடைய முகநூல் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார்.

இதையும் படிங்க - Iraivan: ஜெயம் ரவி - நயன்தாரா காம்போவில் 'இறைவன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அவ்வாறு வெளியான குறுகிய கால நேரத்திலேயே, இப்படத்தின் டீசருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை 'எல்ஜிஎம்' படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் 2.5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து உள்ளது.

மேலும், இது குறித்து இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், '' நகைச்சுவையையும், குடும்பத்தையும் ஒன்றாக இணைத்து குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக 'எல் ஜி எம்' தயாராகி இருக்கிறது. இந்தத் திரைப்படம், உங்கள் ஆத்மாவை தொட்டு சிரிக்க வைக்கும் இதயபூர்வமான பயணம். இப்படத்தின் டீசரை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், இந்த டீசருக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி'' என்றார்.

'எல்ஜிஎம்' படத்தின் டீசருக்கு கிடைத்த உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தின் வெளியீட்டு தேதியையும், படத்தின் வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படம் தோனி தயாரிப்பில் உருவாகி உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.

இதையும் படிங்க:Iraivan: ஜெயம் ரவி - நயன்தாரா காம்போவில் 'இறைவன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Last Updated : Jun 9, 2023, 3:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details