தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விவசாயிகளுடன் ஒரு நாள்'- எம்.ஆம்.கே. பன்னீர் செல்வம் அறிவிப்பு - பன்னீர் செல்வம்

மாதம் ஒருநாள் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் குறைகளை கேட்கவேண்டும் என்ற விவசாயிகளுடன் ஒரு நாள் திட்டத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

panneerselvam
panneerselvam

By

Published : Aug 29, 2021, 1:59 AM IST

சென்னை : மாதம் ஒருநாள் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள், கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் குறைகளை கேட்கும் விவசாயிகளுடன் ஒரு நாள் என்ற திட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி நடைமுறைக்கு வர உள்ளது.

இத்திட்டத்தின்படி,

  • கிராம மக்களின் குறைகளை தீர்க்க மாதத்தில் ஒருநாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் கூட்டங்கள் நடத்த வேண்டும்.
  • இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை தீர ஆராய்ந்து அதனை தீர்க்க முன்வர வேண்டும்.

இந்தத் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவித்தார். முன்னதாக, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது.

இதில், அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கரூர், நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அரசு வேளாண் கல்லூரிகள், ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய்க்கிணறுகள் அமைத்து, மின்மோட்டாருடன் நுண்ணீர்ப்பாசன வசதி அமைத்துத் தருவதற்காக, ரூ.12 கோடி செலவிடப்படும் என்பது உள்ளிட்ட 25 திட்டங்களை அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 13ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 14ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இதன் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

இதையும் படிங்க : முதலமைச்சருக்கு எதிராக கறுப்புக்கொடி; விவசாயிகள் மீது போலீஸ் தடியடி!

ABOUT THE AUTHOR

...view details