தமிழ்நாடு

tamil nadu

"வசந்தகுமார் உயிரிழக்கும்போது அவருக்கு கரோனா இல்லை"- மருத்துவமனை நிர்வாகம்

சென்னை: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் உயிரிழக்கும்போது, அவருக்கு கரோனா தொற்று இல்லை என அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

By

Published : Aug 29, 2020, 8:43 AM IST

Published : Aug 29, 2020, 8:43 AM IST

mp vasanthakumar tested negative for corona
mp vasanthakumar tested negative for corona

கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினரும், தொழிலதிபருமான வசந்தகுமார் (70), கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 28) காலமானார்.

அவரது மறைவிற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கரோனா பாதிக்கப்பட்டதால் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்படுமா எனும் கேள்வி எழுந்த நிலையில், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை நிர்வாகம் வசந்தகுமார் உயிரிழக்கும்போது அவருக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரிவித்துள்ளது.

எனவே, இன்று (ஆக. 29) காலை 9 மணிக்கு மேல் வசந்த குமாரின் உடல் காங்கிரஸ் சத்தியமூர்த்தி பவனில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது. தற்போது அவர் உடல் தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து அங்கு குழுமியிருந்த மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...சகோதரனின் இறப்பு: அதிர்ச்சியில் மயங்கிய குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details