சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், "குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மற்ற நாடுகளிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்கு முன் வந்துள்ளவர்களில் இந்தியாவில் குடியுரிமை அளிக்கப்படும்.
அதற்குப்பின் வந்தவர்களில் இஸ்லாமியர்கள் இருந்தால் குடியுரிமை கிடையாது என ஷரத்திலிருப்பதால் அதனை எதிர்க்கிறார்கள். அதனை மத அடிப்படையில் கொண்டுவந்தது தவறு.
சட்டத்திருத்தங்களில் மதத்தைத் திணிக்கக் கூடாது. இச்சட்டம் நாடு வாரியாக மத வாரியாக இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக கட்டுப்பாட்டில் இருப்பதால் அதனை மீறிச் செயல்பட முடியவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களில் எதிர்ப்பதைப் போல அவரும் எதிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ரஜினிகாந்த் மத்திய அரசை கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது - திருநாவுக்கரசர்!