சென்னை அருகே அண்ணாமலைபுரத்தில் உள்ள கிரீன்வேஸ் சாலையில் மனித உரிமை ஆணையம் உள்ளது. இந்நிலையில், நாராயணசாமி தோட்டத்தைச் சேர்ந்த விஜய், ராஜூ ஆகிய இருவரும் கிரீன்வேஸ் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர்.
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து!
சென்னை: மனித உரிமைகள் ஆணையம் எதிரில் எதிர்-எதிர் திசையில் வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது அவர்கள் இருவரும் மனித உரிமைகள் ஆணையத்திற்க்கு எதிரில் வந்தபோது எதிர்திசையில் வேகமாக வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது. இதில் எதிர்திசையில் வந்த இளைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது.
அதன் பின்னர் அவர் ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.