சென்னை அடுத்த வண்டலூர் வேம்புலியம்மான் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆலையம்மாள் (72). இதய நோயாளியான இவரின் கணவர் 18 ஆண்டுகளுக்கு முன்பாகவே உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு பூபதி, பாபு, ஹாரிகிருஷ்ணன், தண்டபாணி என 4 மகன்களும், அமுதா என்கிற ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் இவர்களின் குடும்ப சொத்து காரணமாக ஆலையம்மாளுடன் முதல் மகன் பூபதிக்கு கருத்து முரண்பாடு இருந்துள்ளது.
மூத்த மகனான பூபதி கூலி வேலை செய்து வருகிறார். ஆலயம்மா பெயரில் இருக்கும் சொத்தை பிரித்துக் கொடுக்கும்படி பூபதி அடிக்கடி பிரச்னை செய்துவந்தார். இந்நிலையில், நேற்று (செப்.,5) ஆலையம்மாளின் வீட்டுக்கு வந்த பூபதி தனது தாயை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவரது முகம், கழுத்து, மார்பு, முதுகு, கைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. பின்னர், ஆலையம்மாளின் தலை முடியை பிடித்து தாக்கியுள்ளார்.