தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைநீர் வடிகால் கால்வாயில் தவறிவிழுந்து தாய், மகள் உயிரிழப்பு - மழை நீர் வடிகால்வாயில் தவறி விழுந்து பலி

சென்னை: நொளம்பூர் சர்வீஸ் சாலையில் தாய், மகள் மழைநீர் வடிகால் கால்வாயில் தவறிவிழுந்து உயிரிழந்தனர்.

death
death

By

Published : Dec 7, 2020, 1:40 PM IST

சென்னை அம்பத்தூர் அடுத்த அயனம்பாக்கத்தில் தனியாருக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருபவர் கரோலின் பிரிசில்லா (50). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள்.

கரோலின் பிரிசில்லா பிரபல தனியார் மருத்துவமனை கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார். இவரது மூத்த மகள் இவாலின் (20) கட்டடக்கலை வல்லுநர் படிப்பு படித்துவந்தார்.

தாய் - மகள் பலி

கரோலின் பிரிசில்லா, இவாலின் மதுரவாயல் சர்வீஸ் சாலை வழியாக எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழகம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி அருகில் இருந்த நெடுஞ்சாலைத் துறை மழைநீர் வடிகால் கால்வாயில் தவறிவிழுந்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே தாயும் மகளும் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் இருவரின் சடலத்தையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவுசெய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சிற்றுந்து விபத்து: குழந்தை உள்பட இருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details