தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 986 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 13 ஆயிரத்து 378 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 205 ஆக உயர்ந்துள்ளது.