தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 80 ஆயிரத்தைக் கடந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை - chennai corona toll

சென்னை: கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

more than 80 thousands people were recovered from corona said chennai corporation
more than 80 thousands people were recovered from corona said chennai corporation

By

Published : Jul 29, 2020, 12:11 AM IST

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனா வைரசின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு நாள்தோறும் தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

கரோனா பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் ராயபுரம், தண்டையார்பேட்டையில் கரோனா பரவல் சற்று குறைந்துள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இந்தப் பரவலைக் குறைப்பதற்கு அப்பகுதிகள் முழுவதும் ஏராளமான மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அதன் பயனாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் கண்டறிந்து, பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது.

இதுவரையிலும் 95 ஆயிரத்து 857 நபர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 80 ஆயிரத்து 761 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 13 ஆயிரத்து 64 நபர்களும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மண்டல வாரியாக கரோனா தொற்று குணமடைந்தவர்களின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கோடம்பாக்கம் - 9,063 பேர்

அண்ணா நகர் - 9,252 பேர்

ராயபுரம் - 9,874 பேர்

தேனாம்பேட்டை - 9,103 பேர்

தண்டையார்பேட்டை - 8,486 பேர்

திரு.வி.க. நகர் - 6,462 பேர்

அடையாறு - 5,424 பேர்

வளசரவாக்கம் - 4,150 பேர்

அம்பத்தூர் - 4,118 பேர்

திருவொற்றியூர் - 2,999 பேர்

மாதவரம் - 2,541 பேர்

சோழிங்கநல்லூர் - 1,821 பேர்

பெருங்குடி - 2,179 பேர்

ஆலந்தூர் - 2,382 பேர்

மணலி - 1,485 பேர்

ABOUT THE AUTHOR

...view details