'முறைகேடாக வெளிமாநிலத்தவர்கள் சேர்க்கை' - திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு - Palanivel Thiagarajan
சென்னை: நீட் கலந்தாய்வுகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களே தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் அதிகளவில் சேர்வதாக மதுரை தொகுதி திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் தரவரிசை பட்டியலில் பிறப்பிட சான்றிதழ் முறைகேடு தொடர்பாக திமுக எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இதேபோல் 2017ஆம் ஆண்டில் வெளிமாநிலத்தினர் போலி இருப்பிடச் சான்றிதழ்களைக் கொண்டு தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தனர். தற்போதும் அதே போன்ற நிலை உருவாகி உள்ளது. பிற மாநில மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களின் இடங்களைப் பிடித்துவிடாத நிலையை உருவாக்க வேண்டும். அதுமட்டுமின்றி இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தார்.