தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் ஏப்ரல் 26 திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
* அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள் இயங்க அனுமதி இல்லை.
* பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறிக் கடைகள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
* அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.
* அனைத்து உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.
* அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை.
* மதம் சார்ந்த திருவிழாக்கள் 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்கு திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று 50 பேருடன் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
* திருமணம் நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
* இறுதி ஊர்வலங்களில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
* தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் (IT & ITES companies) குறைந்த பட்சம் 50 சதவீதப் பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய (Work from Home) வேண்டும்.
* அனைத்து விளையாட்டு பயிற்சி குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை. எனினும், தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.
* புதுச்சேரி தவிர்த்து, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த (e-registration) விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.
* வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம், கப்பல் மூலம் வரும் பயணியர் அனைவரும் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த (e-registration) விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.
* பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில், ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டும் பயணிக்கவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கவும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
* பணிக்குச் செல்லும் பணியாளர்கள், பணிக்குச் சென்று வருகையில் தங்கள் நிறுவனம் வழங்கியுள்ள அடையாள அட்டையைத் தவறாமல் அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* அனைத்து தொழில் நிறுவனங்களும் அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: ஆக்ஸிஜன் தடுப்பாடு: 5 கரோனா நோயாளிகள் உள்பட 6 பேர் உயிரிழப்பு!