நாளுக்கு நாள் சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி சார்பாகப் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், சென்னை மாநகராட்சி அலுவலகத்திலுள்ள அம்மா மாளிகையில் காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆணையர் பிரகாஷ் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அப்போது சென்னையில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நிர்வாக ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், சென்னை மாநகராட்சி ஆணையர் உயர் அலுவலரிடம் கேட்டறிந்தார்.
'சென்னையில் இன்று முதல் தீவிரக் கண்காணிப்பு' மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்! - இன்று
சென்னையில் சுபநிகழ்ச்சிகள், காசிமேடு பகுதிகள், கோயம்பேடு வளாகங்கள் முதலியவற்றை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என, ஆணையர் பிரகாஷ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்திள்ளார்.
இன்று (மே. 6) முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் குறித்தும், இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சுபநிகழ்ச்சிகள், காசிமேடு பகுதிகள், கோயம்பேடு வளாகங்கள் முதலியவற்றை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும், ஆலோசைனை கூட்டத்தில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, கூடுதல் ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் வர வேண்டாம் - அரசாணை வெளியீடு!