தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டில் விடப்பட்ட ரிவால்டோ - காணொலிப் பதிவுத் தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவு! - நீலகிரி ரிவால்டோ யானை

காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து காணொலிப் பதிவு தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

monitor-rivolto-elephant-activities-round-oclock-mhc-order
monitor-rivolto-elephant-activities-round-oclock-mhc-order

By

Published : Sep 23, 2021, 6:13 PM IST

நீலகிரி : மசினக்குடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ யானை தும்பிக்கை சுருங்கி சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த யானைக்கு வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து சிகிச்சை அளித்த வனத்துறையினர் அதனை சமீபத்தில் காட்டில் விட்டனர். ஆனால், அந்த யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு திரும்பி வந்துவிட்டது.

இந்நிலையில், அந்த யானையை மீண்டும் காட்டில் விட எதிர்ப்புத் தெரிவித்தும், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்குக் கொண்டு செல்ல உத்தரவிடக் கோரியும் இந்திய விலங்குகள் உரிமை, கல்வி மையம் என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தார்.

ரிவால்டோ காணொலி பதிவு

இந்த வழக்குத் தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, யானையின் நடமாட்டம், உணவு அருந்துவது குறித்த காணொலிப் பதிவு வனத்துறை சார்பிலும், மனுதாரர் சார்பில் இந்தியாடுடே தொலைக்காட்சிப் பதிவு செய்த காட்சியும் காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து, ரிவால்டோ யானை ஒரு நாளைக்கு 250 கிலோ உணவு மற்றும் 200 லிட்டர் நீர் பருக வேண்டும். ஆனால், தும்பிக்கைப்பாதிக்கப்பட்டுள்ளதால், அதனால் உணவை முழுமையாக சாப்பிட முடியாமல் பாதி உணவு, நீர் கீழே விழுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரிவால்டோ யானை ஆரோக்கியமாக இருப்பதால் மீண்டும் காட்டில் விட வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்த தலைமை வனப் பாதுகாவலர், ரிவால்டோ யானையை ஐந்து மருத்துவர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் யானை காட்டிற்குள் விடப்பட்டுள்ளதாகவும், ரிவால்டோ காட்டில் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து கண்காணிக்க உத்தரவு

இதையடுத்து,தும்பிக்கையில் குறை இருந்தாலும் ரிவால்டோவால் சாப்பிட முடிவதாகத் தெரிவித்த நீதிபதிகள், விலங்குகள் காட்டில் தான் சிறப்பாக இருக்க முடியும் என கருத்துத் தெரிவித்து, காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, எட்டு வாரத்தில் காணொலிப் பதிவை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டதற்கு, யானைகள் வழித்தடத்தில் மனித தலையீடு இல்லமால் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : மாணவிக்கு கத்திக்குத்து: காதலன் தற்கொலை முயற்சி

ABOUT THE AUTHOR

...view details