தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - நாளை முதல் பள்ளிகள் திறப்பு

ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஜூன் 13) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாளை 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
நாளை 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு

By

Published : Jun 12, 2022, 3:25 PM IST

சென்னை:ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நாளை (ஜூன் 13) முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகள் செயல்படும் நேரம் குறித்து காலை எப்போது பள்ளிகளைத் தொடங்கலாம்? மாலை எப்போது பள்ளிகளை முடிக்கலாம்? என்பது தொடர்பாக அந்தந்த பள்ளிகளே முடிவெடுக்கலாம் எனவும்; காலை 9.10 மணி முதல் 4.10 மணி வரை பள்ளி வேலைநேர திட்டத்தை வெளியிட்டுள்ளது.

மேலும் பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை அந்தந்த பள்ளிகளே, பள்ளி மேலாண்மைக் குழுக்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்து கொள்ளலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

அதன் முக்கிய அறிவிப்புகள் கீழ் வருமாறு:-

  • பல்வேறு கல்வி இணைச்செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் 80 பேரை, வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டம்.
  • இனி வாரத்தில் ஒருநாள் நீதிபோதனை வகுப்புகள் நடைபெறும் என்ற அறிவிப்பானது, கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகள் அடிப்படையில் செயல்படுத்தப்படயிருக்கிறது.
  • இனி ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதற்கு முந்தைய நாள் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு நடத்தப்பட்டு ஒவ்வொரு மாணவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பெற்றோரிடம் விவாதிக்க வேண்டும்.
  • தினசரி இனி உணவு இடைவேளைக்குப்பிறகு, பிற்பகல் 1 முதல் 1.20 மணி வரை, மாணவர்கள் சிறார் பருவ இதழ்களை வாசிக்கவும் செய்தித்தாள்களை வாசிக்கவும் நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.
  • இணையதளங்கள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்விற்காக, புதிதாக கணினி நிரல் மன்றங்கள் கணினி ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளன.

இதையும் படிங்க:பஞ்சாங்கத்தின் "பாஸ்" திரிசூல வேந்தன்... 7 வயதில் துல்லிய கணிப்பு...

ABOUT THE AUTHOR

...view details