தமிழ்நாடு அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் மற்றும் செல்லம்மாள் மகளிர் கல்லூரி இணைந்து அகராதியியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’சொற்கோவை இணையதளம் தொடங்கப்பட்ட பின் அதில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதிகளவில் இணைந்து பணியாற்றி பயன்பெற வேண்டும் என கல்லூரிகள் தோறும் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தி வருகின்றோம். இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் இளைஞர்கள் இதில் இணைய வேண்டும். மாதத்திற்கு 100 கல்லூரிகள் வீதம் 2000 கல்லூரிகளில் சொற்கோவை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு எனத் தனி தலைவர் மற்றும் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான பணிகள் நடைபெற்றுவருகின்றன. விரைவில் ஹார்வர்டு தமிழ் இருக்கை செயல்படத் தொடங்கும் என நம்புகிறேன். கிருஷ்ணகிரி அருகே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் சென்னையைப் பற்றிய பல தகவல்கள் இருக்கின்றன. இதன் மூலம் சென்னையின் வரலாறு வெறும் 375 ஆண்டுகள் அல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமையானது என தெரியவந்துள்ளது.
விரைவில் ஹார்வர்டு தமிழ் இருக்கை செயல்படத் தொடங்கும்..! - அகராதியியல் விழிப்புணர்வு
சென்னை: ஹார்வர்டு தமிழ் இருக்கை விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என நம்புவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
பாண்டியராஜன்
மொழிதான் ஒரு மனிதனை முதன் முதலாக அடையாளப்படுத்தும். தமிழை இளமையாக வைத்திருக்க வேண்டியது இன்றைய இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது. அமெரிக்காவில் இரண்டு மாகாணங்களில் அலுவல் மொழியாக உள்ள தமிழை, 10 மாகாணங்களில் அலுவல் மொழியாக அங்கீகாரம் செய்ய வலியுறுத்தப்பட்டுவருகிறது” என்றார்.