தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் நீதி மய்யம் கட்சி தோ்தல் பரப்புரை அட்டவணையில் மாற்றம் - கோவை

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கோவையில் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யபட்ட சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூற செல்வதால் இன்று நடைபெறவிருந்த தேர்தல் பரப்புரை தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

File pic

By

Published : Mar 29, 2019, 9:19 AM IST

இது குறித்து மக்கள் நீதிமய்யம்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தியறிக்கையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கோவையில் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யபட்ட சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கோவை செல்லவிருக்கிறார்.

சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுப்பதில் பிரச்சனை நிலவிவரும் நிலையில் இந்த வழக்கில், மக்கள் நீதிமய்யம்கட்சி நேரிடையாக தலையிட்டு அந்த வழக்கை தங்கள் கையில் எடுத்து நடத்துவதற்கானமுயற்சியில்மக்கள் நீதிமய்யம்ஈடுபடும். கோவைக்கு செல்லும் கமல்ஹாசன் இன்று மாலையே சென்னை திரும்புவார்.

கமல்ஹாசன் கோவை செல்வதால்இன்று நடைபெற இருந்த தேர்தல் பரப்புரை அட்டவணையில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்தல் பரப்புரை அட்டவணையில் மாற்றம் இருக்கும்.

விரைவில் தேர்தல் பரப்புரை அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Logo

ABOUT THE AUTHOR

...view details