தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலகுக்கோர் சித்தாந்தத்தைக் வழங்கிய கிழவர் - காந்தியடிகளுக்கு கமல் புகழாரம்! - நடிகர் கமல்ஹாசன்

காந்தி ஜெயந்தியான இன்று மகாத்மா காந்தியடிகளைப் புகழ்ந்து மநீம தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் ட்விட்
கமல்ஹாசன் ட்விட்

By

Published : Oct 2, 2021, 6:19 PM IST

சென்னை: காந்தியடிகளின் 152ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று (அக். 2) கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் அவரை நினைவுகூர்ந்து அவரது அரும்பெரும் பெருமைகளைப் புகழ்ந்தும், வாழ்த்துகளைப் பகிர்ந்தும் வருகின்றனர்.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் காந்தியடிகளைப் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

கமல் ஹாசன் ட்வீட்

அந்தப் பதிவில், "உலகுக்கோர் சித்தாந்தத்தைக் கிழக்கிலிருந்து ஒளிபோல் வழங்கிய கிழவர். அத்தனை வன்முறைகளும் அஞ்சும் அகிம்சையை அறிவித்த ஆற்றலாளர் காந்திக்கு இன்று பிறந்தநாள். ஒரு சகாப்தம் ஜனித்த நாள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காந்தியின் 152 புகைப்படங்களைக் கொண்ட புகைப்படக் கண்காட்சி

ABOUT THE AUTHOR

...view details