சென்னை:தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். ஆனால், தற்போதைய தமிழக அரசு, 12 மணி நேர வேலை மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
விருப்பம் அடிப்படையில் 12 மணி நேர வேலை 3 நாட்கள் விடுமுறை தொடர்பான மசோதா நேற்று(ஏப்.21) சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது அதிமுக சார்பாகவும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கு மக்கள் நீதி மய்யமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அம்பேத்கரால்8 மணி நேர வேலை உரிமை:இது தொடர்பாக மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் செய்தி குறிப்பில், 'உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 18 முதல் 20 மணி நேரம் வரை கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதை எதிர்த்து பல்வேறு நாடுகளிலும் கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டு, ஏராளமானோரின் உயிர்த் தியாகங்களுக்குப் பிறகு 8 மணி நேர வேலை என்ற அடிப்படை உரிமை கிடைத்தது. 1945-ல் இந்தியத் தொழிலாளர்களுக்குச் சட்டப்பூர்வமாக 8 மணி நேர வேலை உரிமையை டாக்டர் அம்பேத்கர் பெற்றுத் தந்தார்.
6 மணி நேரமாக்க எண்ணிய கருணாநிதி:என்தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். ஆனால், தற்போதைய தமிழக அரசு, எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, 12 மணி நேர வேலை மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.