சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்தது குறித்து முன்னாள் மேயர், சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சுப்பிரமணியன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷை சந்தித்து கோரிக்கை மனுவை திமுக சார்பில் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சென்னை மாநகராட்சியில் 10, 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாக கரோனா உள்ளிட்ட பேரிடர் காலத்தில் தன் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் மக்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக போராடி வந்தவர்கள் தூய்மைப் பணியாளர்கள்.
பணி நீக்கம்
அவர்களது பணி பாராட்டுக்குரியது. 12 ஆயிரம் ஒப்பந்த் தூய்மைப் பணியாளர்களில் 7 ஆயிரம் பேரை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு மீதமுள்ள 5 ஆயிரம் பேரை பணியிலிருந்து கடந்த 12 ஆம் தேதி மாநகராட்சி முன்னறிவிப்பின்றி நீக்கியுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மாநகராட்சியை கண்டித்து போராட்டங்கள் நடத்தியும், நீதிமன்றத்தை நாடியும் வருகின்றனர். இந்தநிலையில், தூய்மைப் பணியாளர்கள் சங்க பிரதிநிதிகள் 500-க்கும் மேற்பட்டோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இது குறித்து பேசினர்.
செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் எம்எல்ஏ சுப்பிரமணியன் வேறு துறைக்கு மாற்றலாம்
இதையடுத்து, மு.க.ஸ்டாலின் அளித்த கோரிக்கை கடிதத்தை, இன்று மாநகராட்சி ஆணையரிடம் அளித்துள்ளோம். தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை 50 விழுக்காட்டிற்கும் மேல் பணியிடங்கள் காலியாக வேறு துறைக்கு மாற்ற வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் பக்கம் எப்போதும் திமுக நிற்கும். நான் மேயராக இருந்தபோது இரண்டாயிரத்து 25 ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்துள்ளோம். அனைத்து கோரிக்கையையும் ஆணையரிடம் விடுத்துள்ளோம்." என்றார்.
இதையும் படிங்க:தூய்மைப் பணியாளர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு