சென்னை:சட்டப்பேரவையில், முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டுத்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்துப்பேசிய காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, 'போதிதர்மரின் மரபணுவில் வந்தவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின். அதனால் தான் விளையாட்டுத்துறையை மேம்படுத்த அக்கறை காட்டுகிறார்' எனப் புகழாரம் சூட்டினார்.
'போதிதர்மரின் மரபணுவில் வந்தவர் தான் ஸ்டாலின்..!' - எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை - MK Stalin
ராகுல்காந்தி அடுத்த முறை தமிழ்நாடு வரும்போது முதலமைச்சர் ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்டுவதற்கான விருப்பத்தை வைத்துள்ளதாக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
’போதிதர்மரின் மரபணுவில் வந்தவர் தான் ஸ்டாலின்..!’ - எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை
மேலும், ''முதலமைச்சரின் ’உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு ராகுல் காந்தி வந்தபோது, முதலமைச்சர் ஸ்டாலினின் வயது குறித்து பேசினார். அவர் வாரம்தோறும் சைக்கிள் ஓட்டுவதை அறிந்து, முதலமைச்சரிடம் பேசிய ராகுல்காந்தி, அடுத்த முறை வரும்போது முதலமைச்சர் ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற விருப்பத்தை முன் வைத்திருந்தார்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Video: எடப்பாடியை கலாய்த்த உதயநிதி - ஓபிஎஸ் கூறிய அதிரடி பதில்!