கறுப்புப் பூஞ்சை தொற்று - மருந்துகள் வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு - மருந்துகள் வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு
12:50 June 07
கறுப்புப் பூஞ்சை சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகளை வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், 'முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு இதுவரையிலும் ரூ.280.20 கோடி அளித்திருக்கும் நன்கொடையாளர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி! இத்தொகையிலிருந்து கரோனா சிகிச்சைக்காக ஏற்கனவே ரூ.141.40 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், கறுப்புப்பூஞ்சை சிகிச்சைக்கான மருந்துகள் வாங்கிட ரூ.25 கோடி ஒதுக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.