தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்; தலைநிமிர்ந்து வருகிறேன்' - மு.க. ஸ்டாலின் - MK STALIN video about kalaignar forever in Twitter

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருக்கமான காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

mk
மு.க ஸ்டாலின்

By

Published : Jun 3, 2021, 10:10 AM IST

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்ட காலம் (50 ஆண்டுகள்) தலைவராக இருந்தவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் உள்பட பலரும் அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் 'தலைநிமிர்ந்து வருகிறேன்' என்ற தலைப்பில், தனது குரலில் பேசி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,

"திருவாரூரில் கருவாகி தமிழ்நாட்டையே தனது ஊராக்கிய தலைவர்களுக்கெல்லாம் தலைவர்; முதலமைச்சர்களுக்கெல்லாம் முதலமைச்சர் முத்தமிழ் கலைஞர் அவர்களே, இன்று ஜூன் 3 உங்கள் பிறந்தநாள் மட்டுமல்ல; உயிரினும் மேலான கோடிக்கணக்கான உடன்பிறப்புகள் அனைவரும் புத்துணர்ச்சி பெற்ற நாள். அதனால்தான் கழகத்தின் கண்மணிகளாம் கறுப்பு சிவப்பு தொண்டர்கள் அனைவருக்கும் தனித்தனி பிறந்த நாள்கள் இல்லை. எல்லோருக்கும் பிறந்தநாள் இந்த ஜூன் 3.

கம்பீரமாக வருகிறேன்

வங்கக் கடலோரம் வாஞ்சைமிகு தென்றலின் தமிழ் தாலாட்டில் உங்கள் கண்ணான அண்ணனாம் பேரறிஞருக்குப் பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் எனது ஆரூயிர் தலைவரே, இந்த ஜூன் 3 நான் கம்பீரமாக வருகிறேன். உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்துவருகிறேன்

கரோனாவை விரட்ட போராடிக் கொண்டிருக்கிறோம்

நீங்கள் மறையவில்லை. மறைந்திருந்து என்னை கவனிப்பதாகத்தான் எப்போதும் நினைப்பேன். கோட்டையைக் கைப்பற்றிய அடுத்த நாளே கரோனாவை விரட்ட போராடிக் கொண்டிருக்கிறோம். உழைப்பு உழைப்பு உழைப்பு என்று நீங்கள் உருவகப்படுத்தினீர்கள். அதற்கு உண்மையாக இருக்கவே உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

வெற்றிச் செய்தியோடு சந்திக்க வருகிறேன்

உங்கள் சொல் எனக்கு சாசனம்; உங்கள் வாழ்க்கை எனக்குப் பாடம்; உங்கள் பாராட்டே எனக்கு உயிர்விசை; உங்கள் குரலே எனக்குத் தேனிசை. உங்களது வார்ப்பான நான் இந்த ஜூன் 3, உங்களை வெற்றிச் செய்தியோடு சந்திக்கவருகிறேன். வாழ்த்துகள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே?'' என்று பேசியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details