தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பகீர் கிளப்பும் அதிர்ச்சி தகவல்: 'அமைச்சர் விளக்கமளிப்பாரா?' - ஸ்டாலின் கேள்வி - dmk leader stalin tweet

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவிப்பாரா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

stalin
stalin

By

Published : Aug 8, 2020, 8:21 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்களும் செவிலியரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நாட்டிலேயே கரோனா பாதிப்பில் உயிரிழந்த மருத்துவர்களில், தமிழ்நாட்டில்தான் 43 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 23 பேரும், குஜராத்தில் 20 பேரும், பிகாரில் 15 பேரும், டெல்லி, கர்நாடகாவில் தலா 12 பேரும், ஆந்திரா, உத்தரப் பிரேதசத்தில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் 43 மருத்துவர்கள் இறக்கவில்லை என அமைச்சர் விஜய பாஸ்கர் மறுத்ததாகக் கூறப்படுகிறது.

அமைச்சரிடம் கேள்வியெழுப்பும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில், "தமிழ்நாட்டில் 43 மருத்துவர்கள் கரோனா தொற்றால் இறந்தார்கள் என்ற செய்தியை அமைச்சர் விஜய பாஸ்கர் மறுத்தார். இந்தியாவில் 196 மருத்துவர்கள் இறந்திருப்பதாக ஐஎம்ஏ பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்நாடு மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் அறிவிப்பாரா? மரணங்களை மறைப்பது தடுக்கும் வழியன்று" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மூணாறு பெருந்துயர் : நிலச்சரிவில் இதுவரை 23 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details