தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துவருகிறது. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டுகிறது. வைரஸ் தடுப்பு பணியில் மாநில அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கரோனாவை தடுக்க செயல்திட்டம் வகுத்து செயல்பட வேண்டும் - முதலமைச்சருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்! - ஸ்டாலின் ட்வீட்
சென்னை: கரோனா தொற்றை தடுக்கவும், நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது குறித்தும் முதலமைச்சர் உடனடியாக செயல்திட்டம் வகுத்து செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ” கோவிட் 19 சென்னையிலும் தொடர்கிறது; கிராமங்களிலும் வேகமாகப் பரவுகிறது. தடுப்பு & சிகிச்சை குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து பெற்ற கருத்துகளை @CMOTamilNaduகவனத்திற்கு அளிக்கிறேன். #Coronaவை தடுக்கவும், பிற நோயாளிகள் சிகிச்சை பெறவும் செயல்திட்டம் வகுத்து செயல்பட வேண்டும்.
கரோனா தொற்று நகரங்கள் முதல் கிராமங்கள்வரை பரவியும் சமூக பரவல் இல்லை என்றும் மீண்டும் மீண்டும் சொல்வது, மக்களுக்கு விபரீதத்தை உணர்த்த தவறும் ஆபத்தான போக்கு ஆகும். உடனடியாக சமூகப் பரவல் குறித்து முறைப்படி ஆய்வு மேற்கொள்ள தனியாக ஒரு வல்லுநர் குழு நியமித்து- அறிக்கை பெற்று உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.