2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியாக தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஜனவரி மாதம் வரையில் ஐந்தாயிரத்து 197 டாஸ்மாக் கடைகள் இருப்பதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இரண்டாயிரம் கடைகள் திறக்கப்பட்டதாகவும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
‘படிப்படியான மதுவிலக்கு என்ன ஆனது?’ - அரசுக்கு ஸ்டாலின் கேள்வி
சென்னை: படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற அதிமுகவின் வாக்குறுதி என்ன ஆனது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
MKStalin
இந்த நாளிதழ் செய்தியைக் குறிப்பிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”கடந்த 3 ஆண்டுகளில் இரண்டாயிரத்திற்கும் மேலான டாஸ்மாக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம்.!
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு என அதிமுக போட்டு வரும் இரட்டை வேடம் இது! ” என்று பதிவிட்டுள்ளார்.