இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் வட மாநிலத்தவர்கள் 90 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்’ என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அந்தத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் கூட தேர்வாகவில்லை என்பது கடும் கண்டத்திற்குரியது.
மத்தியில் பாஜக அரசும், இங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் அமைந்தப் பிறகு, தமிழக இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது கேள்விக்குறியாகிவிட்டதோடு மட்டுமின்றி ஏற்படுகின்ற பணியிடங்களிலும் வட மாநிலத்தவர் திணிக்கப்படுகிறார்கள் என்பது இரட்டை வேதனையளிக்கிறது.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் இல்லை. பிறகு ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 1765 பேரில் 1600 பேர் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.