தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கமலா ஹாரிஸுக்குத் தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய ஸ்டாலின்! - MK stalin

சென்னை: உங்களது வெற்றி மாபெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது என அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கமலா ஹாரிஸுக்குத் மு.க. ஸ்டாலின் தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

கமலா ஹாரிஸுக்குத் தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய முக ஸ்டாலின்!
கமலா ஹாரிஸுக்குத் தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய முக ஸ்டாலின்!

By

Published : Nov 9, 2020, 2:42 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று துணை அதிபராகப் பொறுப்பேற்க உள்ள தமிழ்நாட்டைப் பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழில் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்பதோடு நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கும் இனிய செய்தி.

கமலா ஹாரிஸுக்குத் தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய முக ஸ்டாலின்!
கமலா ஹாரிஸுக்குத் தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய முக ஸ்டாலின்!
கமலா ஹாரிஸுக்குத் தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய முக ஸ்டாலின்!

ஒரு தமிழ்ப்பெண் அமெரிக்காவையும் ஆளத் தகுதி படைத்தவர் என்பதை உங்களது கண்ணோட்டமும், கடின உழைப்பும் மெய்ப்படுத்திக் காட்டியுள்ளது.

உங்கள் ஆட்சிக்காலம் அமெரிக்காவுக்கு மேலும் புகழ் சேர்த்து தமிழர் நம் பாரம்பரியப் பெருமையை உலகுக்குப் பறைசாற்றுவதாக அமையட்டும்.

தங்களது வருகையை தமிழ்நாடு எதிர்நோக்கி காத்திருக்கிறது. தங்களது வெற்றிக்கு மீண்டும் ஒருமுறை எனது மகிழ்ச்சியையும் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...'நான் முதல் பெண் துணை அதிபராக இருக்கலாம்; ஆனால்...' - கமலா ஹாரிஸ்

ABOUT THE AUTHOR

...view details