மேற்கு வங்கத்தில் மூன்று ஐபிஎஸ் அலுவலர்களை மத்திய அரசு பணி இடமாற்றம் செய்துள்ள நிலையில், இந்த உத்தரவை பிரதமர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு பேஸ்புக் பதிவில், மேற்கு வங்கத்தில் பணியாற்றும் மூன்று ஐபிஎஸ் அலுவலர்களை மத்திய பாஜக அரசு ஒருதலைபட்சமாக இடமாற்றம் செய்திருப்பது எதேச்சதிகாரமானது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. டெல்லியில் உள்ள மத்திய அரசானது தம் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டின் குடிமைப்பணிகளில் ஆணையிடுதல் கூடாது. பிரதமர் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.