தமிழ்நாடு

tamil nadu

ராமசாமி படையாச்சியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

சென்னை: ராமசாமி படையாட்சியாரின் 102ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

By

Published : Sep 16, 2019, 4:33 PM IST

Published : Sep 16, 2019, 4:33 PM IST

மு.க.ஸ்டாலின்

ராமசாமி படையாட்சியாரின் 102ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ராமசாமி படையாச்சியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

ABOUT THE AUTHOR

...view details