தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் தாயார் இறப்பிற்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்! - MK Stalin paid floral tributes to Rajamani Thangapandian potriat

சென்னை : திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் தாயார் உயிரிழந்ததை முன்னிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் தாயார் இறப்பிற்கு முக ஸ்டாலின் ஆறுதல்!
தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் தாயார் இறப்பிற்கு முக ஸ்டாலின் ஆறுதல்!

By

Published : Oct 12, 2020, 2:17 PM IST

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தாயார் ராஜாமணி அம்மாள் (வயது 84) கடந்த 4ஆம் தேதி இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று (அக்.12), திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் உள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மனைவி ராஜாமணி தங்கபாண்டியனின் இல்லத்திற்குச் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியனின் தாயார் இறப்பிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்.

மேலும், தங்கபாண்டியனின் மகளும், தென் சென்னை மக்களவை உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன், தங்கபாண்டியன் புதல்வரும், முன்னாள் அமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலருமான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., உள்ளிட்ட குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின்போது மு.க.ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலின் உடனிருந்தார்.

இதையும் படிங்க...தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் தாயார் உயிரிழப்பு: எம். பி கனிமொழி ஆறுதல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details