சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15ஆவது உட்கட்சி தேர்தல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று (அக் 9) சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் உட்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார். தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளுக்கும் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் அறிவிக்கப்பட்டனர். இதன்படி,
- தலைவர் - மு.க.ஸ்டாலின்
- பொதுச்செயலாளர் - துரைமுருகன்
- பொருளாளர் - டி.ஆர்.பாலு
- முதன்மைச் செயலாளர் - கே.என்.நேரு
- தணிக்கைக்குழு உறுப்பினர்கள் - முகமது சகி, கு.பிச்சாண்டி, வேலுச்சாமி மற்றும் சரவணன்
- துணைப் பொதுச்செயலாளர்கள் - இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா எம்.பி., அந்தியூர் செல்வராஜ் எம்.பி. மற்றும் கனிமொழி எம்.பி.