தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிராம சபை கூட்டம் ரத்து: மீறி பங்கேற்கும் மு.க. ஸ்டாலின், கனிமொழி...! - மகளிரணிச் செயலாளர் கனிமொழி

சென்னை: தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மகளிரணிச் செயலாளர் கனிமொழி ஆகியோர் தடையை மீறி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

MK stalin & Kanimozhi  will participate Village council meetings
MK stalin & Kanimozhi will participate Village council meetings

By

Published : Oct 2, 2020, 10:25 AM IST

அனைத்து மாவட்டங்களிலும் இன்று (அக். 2) நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இன்று (அக். 2) தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தி, விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அதன் முன்னெடுப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு கிராம சபை கூட்டத்திலும், மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தூத்துக்குடியில் உள்ள கிராமத்தின் கிராம சபைக் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

கிராம சபை கூட்த்தில் பங்கேற்கும் முக ஸ்டாலின்

அதுமட்டுமின்றி, திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியை அடுத்துள்ள புதுச்சத்திரம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியானதையடுத்து, பொதுமக்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு காவல் துறை குவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபைக் கூட்டம் ரத்து - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details