தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்.03) வனம், சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இதில் பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், வ.உ.சியின் 150ஆவது பிறந்தநாள் அரசு விழாவாக நடத்தப்படும் என சுதந்திர தின உரையில் கூறினேன். அதனைத்தொடர்ந்து, தற்போது அவரது பிறந்தநாளை முன்னிட்டு 14 முக்கிய அறிவிப்புகளை அறிவிக்கிறேன்.
1) சென்னை காந்தி மண்டபத்தில் வ.உ.சியின் நினைவை பிரதிபலிக்கும் வகையில் செக்கு மண்டபம், மார்பு அளவு சிலை நிறுவப்படும்.
2) தூத்துக்குடி பெரிய காட்டான் சாலை இனிமேல் வ.உ.சி சாலை என்று அழைக்கப்படும்.
முதலமைச்சர் அறிவித்த 14 அறிவிப்புகள் 3) கோவை வ.உ.சி பூங்காவில் அவரின் முழு உருவச் சிலை நிறுவப்படும்.
4) ஒட்டப்பிடாரம், நெல்லையில் உள்ள மணிமண்டபம் புனரமைக்கப்பட்டு அவரின் வரலாறு ஒளி, ஒலிக் காட்சி ஏற்படுத்தித் தரப்படும்.
5) வ.உ.சியின் வரலாற்றை டிஜிட்டல் வழியில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
6) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சி ஆய்வு இருக்கை வைக்கப்படும்.
7) தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் அவரின் புத்தகங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.
8) வ.உ.சி ,மகாகவி ஆகியோர் பயின்ற பள்ளிகளில் 1.5 கோடி ரூபாய் செலவில் புதிய கலையரங்கம் மாணவர் பலனடையும் வகையில் செலவு செய்யப்படும்.
9) கப்பல் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு கப்பலோட்டிய தமிழன் விருது மற்றும் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
10) நவம்பர் 18ஆம் தேதியான அவரது நினைவு நாள் தியாகத் திருநாளாக கடைபிடிக்கப்படும்.
11) தூத்துக்குடி ,நெல்லை மாவட்டங்களில் இந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி முதல் அடுத்த (2022) ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் கட்டப்படும் அரசு கட்டடங்களுக்கு வ.உ.சி பெயர் வைக்கப்படும்.
12) அரசு பேருந்துகளில் வ.உ.சியின் புகைப்படங்கள், வரலாற்றுப் பதிவுகள், புகைப்படக் கண்காட்சி ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
13) வ.உ.சி வரலாறு குறித்து மாணவர்களுக்கு இணையவழி கருத்தரங்கம் நடத்தப்படும்.
14) வ.உ.சியின் நூல்கள், கையேடுகளை இளைஞர்கள் பார்த்து பயனடையும் வகையில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
இதையும் படிங்க:அயோத்திதாசருக்கு மணிமண்டபம்