சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த விஜய் (17), அவரது நண்பர் திராவிட குமார் ஆகியோர் ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று மதியம் திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் கடல் பகுதியில் குளிக்கச் சென்றனர்.
அப்போது இருவரும் ராட்சச அலையில் சிக்கி கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விஜயை மீட்டெடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மேலும், காணாமல்போன குமாரைத் தேடும்பணியில் திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு, மீனவர்கள் உதவியுடன் கடலுக்குச் சென்று தீவிரமாகத் தேடியுள்ளனர்.