தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் வீட்டில் தனிமை இருப்பவர்களிடம் தொலைப்பேசியில் உரையாடிய அமைச்சர்கள்!

கோவை: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களிடம், அமைச்சர்கள் தொலைப்பேசி மூலம் நலம் விசாரித்தனர்.

mins
அமைச்சர்கள்

By

Published : May 30, 2021, 7:49 AM IST

கரோனா இரண்டாம் அலை, கோவையில் தீவிரமாகப் பரவி வருவதையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவரும் கோவை மாவட்டத்தில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகப் பணியமர்த்தப்பட்டனர்.

அவ்வப்போது அதிகாரிகளுக்குத் தேவையான உதவிகள், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். இருவரும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று(மே.29) கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நபர்களிடம் தொலைப்பேசி மூலம் நலம் விசாரித்தனர். மேலும் அங்கு கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்தும் அமைச்சர்கள் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details