காணாமல்போன மீனவர்களை மீட்டுத்தர வலியுறுத்தி சென்னை மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்களின் உறவினர்கள் குவிந்தனர். தகவலறிந்து அங்கு வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், காணாமல்போன மீனவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்துவருவதாக அவர்களிடம் கூறினார்.
இந்தப் பணியில் உள்ளுர் படகுகள், கடலோர காவல்படை விமானம், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், அண்டை நாடுகளுக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
காணாமல்போன மீனவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அழைத்து வரப்படுவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார். இதனையடுத்து மீனவர்களின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
முன்னதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஜூலை 23ஆம் தேதி சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 10 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்று, ஆகஸ்ட் 7ஆம் தேதி கரை திரும்ப வேண்டிய IND - TN - 02 - MM - 2029 , என்ற பதிவெண் கொண்ட ஆழ்கடல் மீன்பிடிப்பு விசைப்படகு கரை திரும்பவில்லை.