சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் நிறைவுபெற்றது. இந்தக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அரசு அலவலர்கள் பங்கேற்றனர். அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், பேரவைத் தலைவர் தனபால் தலைமையில், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தொடங்கியது.
அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் தொடங்கியது! - dhanabal
சென்னை: அமைச்சரவைக் கூட்டம் முடிவுற்ற நிலையில், பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது.
தனபால்
இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், திமுக, காங்கிரஸ் கட்சிகளின் கொறடாக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம், எந்தெந்த துறை மானியக் கோரிக்கைகளை எந்த நாளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், கூட்டத்தின் முடிவில் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை பேரவைத் தலைவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.