தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா: பிரதமர் மோடிக்கு அழைப்பு - பிரதமர் மோடிக்கு அமைச்சர்கள் அழைப்பு

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழை தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி, தலைமைச் செயலாளர் ஆகியோர் பிரதமர் மோடியிடம் வழங்கினார்கள்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அமைச்சர்கள் அழைப்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அமைச்சர்கள் அழைப்பு

By

Published : Jul 19, 2022, 6:50 PM IST

சென்னை:கரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடந்த 15 ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.

அப்போது முதலமைச்சர் சென்னையில் வரும் 28 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு அழைப்பு விடுக்க தான் நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு, தற்போது கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதை தெரிவித்தார்.

இதனால் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி, தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும்,
தொடக்க விழா நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி, தலைமைச் செயலாளர் ஆகியோர் சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்கான அழைப்பிதழையும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான “தம்பி” சின்னத்தையும் வழங்கி, விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்கள்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அமைச்சர்கள் அழைப்பு

மேலும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி கலவரம் விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு; டிஜிபி உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details