நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை கரோனாவால் 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 66 ஆயிரத்து 254 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதில் மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் பணி மிகவும் முக்கியமானது. கரோனா காலத்தில் தன்னலம் பார்க்காமல் பணிக்குவந்து மக்களுக்காகப் பணிசெய்யும் அனைவரையும் கரோனா வாரியர்ஸ் என மக்கள் அன்போடு அழைத்துவருகின்றனர்.
தற்போது இவர்களைப் பாராட்டி சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''தன்னை மறந்து பிறர் நலம்காக்க நேரம் அறியாமல், சிரமங்களைப் புன்னகையில் மறைத்துக் கொண்டு உயிர் காக்கும் உன்னதப் பணியில் உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர், துறை சார்ந்த அத்தனை பணியாளர்களின் தியாகத்திற்கும் இதயம் நிறைந்த தொடர் நன்றிகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தகுதியற்றவர்களின் தகுதி விரைவில் தீர்மானிக்கப்படும் - அமைச்சர் உதயகுமாருக்கு ஆ.ராசா பதிலடி!