தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும் - ஸ்டாலினுக்கு விஜயபாஸ்கர் எச்சரிக்கை - வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும்

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் என்றும் தகவல் கையேட்டில் மாணவர்கள் கலந்தாய்விற்கு வெளியிட்டுள்ள சரத்துகளை அவர் படித்து பார்க்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

minister vijayabaskar
minister vijayabaskar

By

Published : Nov 18, 2020, 7:10 PM IST

சென்னை நேரு விளையாட்டரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு கலந்தாய்வு நடைபெறும் இந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாளாக அமைந்துள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு யாரும் கோரிக்கை வைக்காத நிலையிலும், எதிர்க்கட்சி சார்ந்த எந்த அரசியில் கட்சிகளும் கோரிக்கை வைக்கவில்லை.

கோஷம்போட வில்லை, யாரும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை. ஆனால், முதலமைச்சர் அரசுப்பள்ளியில் படித்ததால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியுள்ளார். ஏற்கனவே, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்த காலத்திலும் 30 முதல் 40 அரசுப் பள்ளி மாணவர்களுக்குதான் எம்பிபிஎஸ் இடம் கிடைத்தது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 313 இடங்கள் கிடைக்கும் வாய்ப்பை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இதற்கு மாணவர்களின் பெற்றோர்களும், மாணவர்களும் கண்ணீருடன் நன்றித் தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து குற்றஞ்சாட்டுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவர், தகவல் கையேட்டில் மாணவர்கள் கலந்தாய்விற்கான சரத்துகளை வெளியிட்டுள்ளோம்.

வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும்

அதனை அவர் படித்து பார்த்து விட்டு, வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். வெளிமாநித்தை சேர்ந்த யாராக இருந்தாலும் பொதுப்பிரிவில் 2 மாநிலத்தில் விண்ணப்பிக்க உரிமை இருக்கிறது. தமிழ்நாட்டின் சரத்து மிகவும் தெளிவாக இருக்கிறது. தமிழ்நாட்டின் இருப்பிடத்திற்கு உரிமை கோரினால் அவர்கள் மீது சட்டப்படியான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் கிடையாது. இருப்பிட சான்றிதழ் தவறு குறித்து நிச்சயம் விசாரணை மேற்கொள்வோம்" என்றார்.

இதையும் படிங்க:ராஜிவ் காந்தி கொலை வழக்கு: எழுவரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details