சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சுதர்சன் (22) , பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளமான ஹலோ செயலியில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் குறித்தும், அவதூறாக பதிவிட்டதோடு மட்டுமின்றி அமைச்சர் தங்கமணியையும் கரோனா வைரசுடன் ஒப்பிட்டு வீடியோ, புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார்.
இதேபோன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்தும், அவதூறாக சித்தரித்தும், கேலி செய்தும் வீடியோ, புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக, கோவை அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் ரியோஷ்கா, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.