சென்னை:சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் இன்று (ஜூன் 22) கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. அங்கு, ஆளுநர் உரையின் விவாதத்தின்போது மனித நேய மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஓஎன்ஜிசி நிர்வாகம் அரியலூரில் 10 எண்ணெய் கிணறுகளும், கடலூரில் ஐந்து எண்ணெய் கிணறுகளும் அமைப்பதற்கு ஒன்றிய அரசிடம் விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பத்திற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து நேற்றே (ஜூன் 21) நிராகரித்தது.