தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு நகை கடன் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக கொறடா சக்கரபாணி, சட்டப்பேரவையில் குற்றம் சாட்டினார்.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நகைகடன்: அமைச்சர் செல்லூர் ராஜூ - sellur raju minister
சென்னை: தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நகைகடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்து பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, 4,449 சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதனை மேலும் மேன்மைப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு 11,000 கோடி ரூபாய் வட்டியில்லா பயிர்க்கடன் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நகை கடன் வழங்க முதலமைச்சரிடம் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.