சென்னை: 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல், பாலிடெக்னிக், கலை-அறிவியல் மாணவர் சேர்க்கை பற்றி உயர் கல்வித்துறை அலுவலர்களுடன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் பொன்முடி, "பேராசிரியர் நியமனம் போன்ற முறைகேடுகள் தொடர்பாக சில பல்கலைக்கழகங்கள் மீது புகார்கள் வந்துள்ளன.
இதனை ஆராய ஐஏஎஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டு புகார்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் சேர்க்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசிய பிறகு அறிவிக்கப்படும்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பு 9ஆம் வகுப்பு தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் சேர்க்கை நடைபெறும். அண்ணா பல்கலைக்கழகத்தில் விருப்பப் பாடங்களாக 8 பாடங்கள் இருந்து வந்த நிலையில், இந்த கல்வியாண்டு முதல் ஒன்பதாவது பாடமாக தமிழ் சேர்க்கப்படுகிறது. மாணவர்கள் விருப்ப மொழியாகத் தமிழ் மொழியைத் தேர்வு செய்துகொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மேட்டூர் அணை திறப்பு: மலர்த் தூவி வரவேற்றார் ஸ்டாலின்